Breaking News

கோப் விசாரணைக்குழுவில் சிக்கினார் தொண்டா – வியாழன் விசாரணை !

 

தொண்டமான் பவுண்டேசனில் நடந்ததாக சொல்லப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஆரம்பித்துள்ள பாராளுமன்ற “ கோப்” குழு , இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் எம்.பி , முத்து சிவலிங்கம் எம்பி உட்பட்ட மேலும் சில முக்கியஸ்தர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது.

இதன்படி நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆஜராகுமாறு பாராளுமன்ற கோப் குழு இவர்களுக்கு அறிவிப்பை விடுத்துள்ளது.

தொண்டமான் பவுண்டேசனின் நிதி கையாளப்பட்டதில் இடம்பெற்றதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள், இந்திய பெண் ஆலோசகர் ஒருவர் நீண்ட காலம் பெரியளவில் சம்பளம் பெற்றமை உட்பட்ட பல விடயங்களை மேற்படி கோப் குழு விசாரித்து வருகிறது.