விளையாட்டு

‘கோபா டெல் ரேய்’ கிண்ணத்தை வென்றது வலென்சியா

கோபா டெல் ரேய் கிண்ணத்துக்கான காற்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்று இடம்பெற்றது.
‘லா லிகா’ சாம்பியன் பார்சிலோனாவிற்கும், வலென்சியாவிற்கும் இடையிலான இந்த போட்டியில், வலென்சியா 2க்கு1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.
பார்சிலோனா சார்பில் அதன் தலைவர் லியோனால் மெசி 73வது நிமிடத்தில் 1 கோலை போட்டார்.
வலென்சியாவின் கெவின் கமேய்ரோ மற்றும் ரொட்ரிகோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோல் வீதம் போட்டு கிண்ணத்தை கைப்பற்ற வழி செய்தனர்.