இலங்கை

கோட்டா வந்தால் வரட்டும் – நான் களமிறங்குவது உறுதி – மைத்ரி அதிரடி !

‘ யார் என்ன செய்தாலும் யார் எப்படி நடந்தாலும் – மஹிந்தவின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி.அவர்களை நம்பிக் கொண்டிராமல் அதற்குரிய வேலைகளை பாருங்கள் ‘

இப்படி தனக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களிடம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து தனது இல்லத்தில் தனக்கு நெருக்கமான சிலருடன் மனம்விட்டு பேசினார் மைத்ரி.

” ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவேன்.அது உறுதி.கோட்டாபயவை இறக்க அவர்கள் தீர்மானித்தாலும் அதற்கு என்ன நடக்குமோ என்பதை பற்றி நாம் யோசிக்கத் தேவையில்லை.நாம் நமது வேலைகளை பார்ப்போம். இனி நீங்கள் பகிரங்கமாக அவர்களை விமர்சிக்கலாம்.இனியும் அவர்களை நம்பிக் கொண்டிராமல் நாம் செயற்படுவோம். ஏற்கனவே நான் பகிரங்கமாக பேச ஆரம்பித்துவிட்டேன்.இனி நீங்களும் ஆரம்பியுங்கள்

‘என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக தகவல்.

முன்னதாக – சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேசிய ஊடக விருது வழங்கும் நிகழ்வில் பேசிய ஜனாதிபதி மைத்ரி ,தமக்கு மாற்றீடாக கொண்டுவர முயலும் ஜனாதிபதி தம்மைப்போல் ஊடகவியலாளர்களை சுதந்திரமாக செயற்பட விடுவாரா என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது