இலங்கை

கோட்டா மீது பாய்ந்தது மற்றொரு வழக்கு !

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாயவுக்கு எதிராக கலிபோர்னிய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது IT J P எனப்படும் நீதிக்கும் உண்மைக்குமான சர்வதேச அமைப்பு.

“கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை துறந்து இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடஉள்ளதால் அவரை விசாரணையில் சிக்கவைக்க இதுவே கடைசித் தருணம்..” என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு இலங்கையில் சித்திரவதைக்கு ஆளாகி பின்னர் விடுதலை பெற்று தற்போது கனடாவில் வசிக்கும் ரோய் சமாதானம் என்பவரே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக கொல்லப்பட்ட பத்திரிகையாளர் லசந்தவின் மகளும் வழக்கொன்றை கோட்டாவுக்கு எதிராக தாக்கல் செய்ததாக செய்திகள் வெளிவந்திருந்தன.