Breaking News

கோட்டா – மஹிந்தவை தொலைபேசியில் வாழ்த்தினார் மோடி !

 

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் தொலைபேசியூடாக பேச்சு நடத்தியுள்ளார்.

இருவருக்கும் தனித்தனியே புதுவருட வாழ்த்துகளை தெரிவித்த இந்தியப் பிரதமர் , எதிர்காலத்தில் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய விரைவில் சீனாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்தியப் பிரதமரின் இந்த நட்புறவு உரையாடல் இடம்பெற்றுள்ளது.