Breaking News

கோட்டா சீனாவுக்கு – மஹிந்த இந்தியாவுக்கு !

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டா இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

முன்னதாக ஜனவரி மாதம் முதல் வாரம் இந்த யணத்தை மேற்கொள்வதற்கு பீஜிங் பரிந்துரைத்திருந்தது என்றும், பின்னர் மீளாய்வு செய்யப்பட்டு, 14, 15ஆம் திகதிகளில் பயணத்தை மேற்கொள்வதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நவம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கோட்டாபய ராஜபக்ச மேற்கொள்ளவுள்ள இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

அவர் நவம்பர் 28 தொடக்கம் 30 வரை இந்தியாவில் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச பெப்ரவரி 8 ஆம் திகதி இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.பிரதமராக பதவியேற்ற பின்னர் மஹிந்த மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் உயர்மட்ட அரசியல் பிரமுகர்களை மஹிந்த இந்த விஜயத்தின்போது சந்திக்கவுள்ளார்.