இலங்கை

கோட்டா – அனுர அனுராதபுரத்தில் – சஜித் கொழும்பில் – பிரசாரங்களை ஆரம்பிக்கின்றனர் !

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச நாளை தனது முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை அனுராதபுரத்தில் ஆரம்பிக்கிறார்.

அனுராதபுரம் மகாபோதி விகாரையில் வழிபாடுகள் முடிந்த பின்னர் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ,பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவை வழங்குவது குறித்து நாளைய தினம் அறிவிக்கப்படுமென சொல்லப்படுகிறது.அது தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுக்கள் இன்று நடைபெறவுள்ளன.

இதற்கிடையில் ஐக்கிய தேசிய முன்னணியின் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முதலாவது கூட்டம் நாளை மறுதினம் கொழும்பு காலிமுகத்திடலில் நடக்கவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது பிரசாரக் கூட்டம் அனுராதபுரம் தம்புத்தேகமவில் இன்று நடைபெறவுள்ளது.அதன் முதன்மை வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் பிறந்த ஊர் தம்புத்தேகம என்பதால் அங்கு இந்தக் கூட்டம் நடப்பது விசேட அம்சமாகும்.