Breaking News

கோட்டாவை நாளை சந்திக்கிறார் தேசப்பிரிய !

 

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

தேர்தல் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவை தொடர்பில் ஆணைக்குழு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசின் ஒத்துழைப்பை தேசப்பிரிய இதன்போது கோருவார்.

அதேபோல தேர்தல் முடிந்த கையோடு புதிய பாராளுமன்றத்தினை கூட்டும்போது எடுக்கப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மஹிந்த தேசப்பிரிய இதன்போது மேலதிகமாக விளக்குவார்.

கொரோனா நிலைமையால் வழமையை விட இம்முறை தேர்தல் கடமைகளில் பாதுகாப்புத் தரப்பினர் கூடுதலான அளவில் தேவைப்படுவதால் அது தொடர்பான விசேட கோரிக்கையையும் மஹிந்த தேசப்பிரிய , ஜனாதிபதியிடம் விடுப்பாரென தெரிகிறது.