Breaking News

கோட்டாவுடன் மோடி தொலைபேசியில் முக்கிய பேச்சு !

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடி முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

கொரோனா வைரஸ் ஒழிப்பு செயற்பாடுகள் குறித்தும் இந்த விடயத்தில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் இந்த உரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்தியாவின் முதலீட்டுப் பணிகள் இதர வர்த்தக செயற்பாடுகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் இலங்கை எடுத்துவரும் நடவடிக்கைகளை இந்தியப் பிரதமர் பாராட்டினார் என்றும் சொல்லப்பட்டது.