Breaking News

கோட்டாவுடன் இணைகிறார் சாகல – ரணிலின் சமரச முயற்சிகள் தோல்வி !

 

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும் அமைச்சருமான சாகல ரத்நாயக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்து அவருடன் இணையவுள்ளதாக உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மற்றும் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் பலசுற்று பேச்சுக்களை சாகல நடத்தியுள்ளதாக தெரிகிறது.

பிரதமர் ரணிலின் அலுவலக பிரதானியாக செயற்படும் சாகல ரத்நாயக்க ,சில தினங்களுக்கு முன்னர் அலரி மாளிகையில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்த முக்கியமான பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் அதன் பின்னர் பிரதமர் ரணில், சாகலவுடன் நடத்திய சமரசப்பேச்சுக்கள் வெற்றியடையவில்லையெனவும் அந்த அரசியல் வட்டாரங்கள் மேலும் கூறின.

இதற்கிடையில் மற்றுமொரு அமைச்சர் கோட்டாவுக்கு ஆதரவு தெரிவித்து இணையவுள்ளபோதும் அது தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்பகரமாக அறியமுடிந்தது.