Breaking News

கோட்டாவுக்கெதிரான வழக்கு – இன்றைய விசாரணை முடிவு !

 

இரட்டைப்பிரஜாவுரிமை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று மாலை நிறைவடைந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மூவர் முன்னிலையில் இன்றும் இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.மீண்டும் நாளை காலை 9.30 மணிக்கு நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.

நாளை தீர்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.