Breaking News

கோட்டாவின் மேடையில் சுதந்திரக் கட்சியின் முக்கிய புள்ளிகள் !

 

 

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெறும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாளைய அனுராதபுர முதலாவது கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அரசியல்வாதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக அறியமுடிந்தது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மஹிந்த தரப்புடன் இணையக் கூடாதென வலியுறுத்தி வந்த முக்கியமான உறுப்பினர்கள் சிலரும் நாளை கோட்டாவுக்கு ஆதரவு தெரிவித்து மேடையேறவுள்ளதாக சொல்லப்பட்டது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதுவும் நாளை அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.