இலங்கை

கோட்டாவின் குடியுரிமையை முற்றாக இரத்துச் செய்தது அமெரிக்கா !

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவின் குடியுரிமையை முற்றாக நீக்கியது அமெரிக்கா .

அப்படி நீக்கப்பட்டமை குறித்தான இறுதி ஆவணச் சான்றிதழை கடந்த 7 ஆம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோட்டபாயவிடம் கையளித்துள்ளது.

மார்ச் ஆறாம் திகதி குடியுரிமை நீக்க விண்ணப்பத்தை தூதரகத்தில் சமர்ப்பித்திருந்த கோட்டாபய ,ஏப்ரல் 17 ஆம் திகதி தனது அமெரிக்க பாஸ்போர்ட்  மற்றும் அமெரிக்க குடியுரிமை சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பித்திருந்தார். அதனையடுத்து இந்த இறுதி ஆவணச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் கோட்டாபய ,அதற்கு தடையாக இருக்கும் அமெரிக்க குடியுரிமையில் இருந்து முற்றாக நீங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.