Breaking News

கோட்டாவின் இரவு விருந்தில் சங்கமித்த சுதந்திரக்கட்சி எம் பிக்கள் !

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச இன்று எதிர்க்கட்சியின் எம் பிக்களுக்கு இரவுநேர விருந்துபசாரமொன்றை வழங்கினார்.

ஷங்கிரி லா ஹோட்டலில் இந்த நிகழ்வு நடந்தது. மஹிந்த அமரவீர , தயாசிறி ஜயசேகர , லசந்த அலகியவண்ண உட்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம்பிக்கள் பெரும்பாலானோர் இதில் கலந்து கொண்டனர்.

சமூகமளிக்க முடியாத சில எம் பிக்கள் தொலைபேசி மூலம் அதனை கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்ததாக அறியமுடிந்தது.

நிகழ்வில் சில எம் பிக்கள் பாடல்களை பாடி அசத்தியதாக மேலும் சொல்லப்பட்டது.