Breaking News

கோட்டாவிடம் அழைப்பாணைகளை கையளித்தது அமெரிக்க நீதிமன்றம் !

அமெரிக்காவிற்கு சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக – கொல்லப்பட்ட பத்திரிகையாளர் லசந்தவின் மகள், மற்றும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் சார்பில் கனேடிய தமிழர் ரோய் சமாதானம் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இரண்டு வழக்குகளின் அழைப்பாணையை கோத்தபாய ராஜபக்சவிடம், சட்டத்தரணியொருவர் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையங்களில் வெளிவந்துள்ளது.

கலிபோர்னியாவிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் கார் தரிப்பிடத்தில் வைத்து கோத்தபாயவிடம் இந்த அழைப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளன.

அருகில் கோட்டாவின் மனைவி அயோமாவும் காணப்படுகிறார்.