Breaking News

கோட்டாபய பெப்ரவரி 16 இல் சீனாவுக்கு – மஹிந்த 8 ஆம் திகதி இந்தியாவுக்கு !

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெப்ரவரி 16 ஆம் திகதி சீனாவுக்கு அரசமுறை பயணம் மேற்கொள்கிறார். முன்னதாக ஜனவரி இரண்டாம் வாரத்தில் அவர் சீனா செல்லவிருந்தபோதும் சீன அரசின் வேண்டுகோளுக்கமைய அந்த விஜயம் பிற்போடப்பட்டது.

அதேசமயம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பெப்ரவரி 8 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சீனா செல்லும்முன்னர் சில முக்கியமான விடயங்கள் குறித்து பேசுவதற்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சில தினங்களுக்கு முன்னர் அவரை கொழும்பில் சந்தித்தார்.பிரதமர் அப்போது திருகோணமலையில் இருந்தமையால் அவருடன் தொலைபேசி மூலம் உரையாடிய அஜித் டோவல் ,பிரதமரின் இந்திய விஜயம் மற்றும் பல விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டார்.

இலங்கை அரசு சீனாவுடன் நெருக்கமாக செயற்படுவதை தடுக்கும் வகையில் இந்திய இராஜதந்திர காய்நகர்வுகளை அண்மைக்காலமாக செய்துவருகிறது.

இதன் ஒரு அம்சமாக இந்தியப் பிரதமர் மோடி விரைவில் கொழும்பு வரவுள்ளாரெனவும் ஒரு தகவல் அறியமுடிந்தது.