Breaking News

கோட்டாபய நாடு திரும்பினார் – எல்பிட்டிய தேர்தல் வெற்றிக்கு ஐ தே க அமைச்சர் ஒருவர் உட்பட பலரும் வாழ்த்து !

மருத்துவ பரிசோதனைக்கு சிங்கப்பூர் சென்றிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பினார்.

எல்பிட்டிய தேர்தல் வெற்றிக்காக பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கோட்டபாயவுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த பிரமுகரான அமைச்சர் ஒருவரும் தொலைபேசியில் தொடர்புகொண்டு கோட்டாவை வாழ்த்தியதாக அறியமுடிந்தது.

நாளை முதல் தனது பிரச்சாரப் பணிகளை நாடளாவிய ரீதியில் அவர் ஆரம்பிப்பாரென கட்சித் தகவல்கள் தெரிவித்தன.