Breaking News

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிரடி கொள்ளை – சந்தேகநபரை விரட்டிப் பிடித்த பொலிஸ்!

 

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் புகுந்த நபர் ஒருவர் டாக்டர் ஒருவரை துப்பாக்கி முனையில் பணயம் வைத்து அங்கிருந்த மூன்றரை கோடி ரூபாவை கொள்ளையிட்டு செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் இந்தப் பணத்துடன் தப்பியோடிய நபரை பொதுமக்களின் உதவியுடன் பொலிஸ் விரட்டிப் பிடித்தது.

ஊழியர்களின் மேலதிக நேர வேலை கொடுப்பனவுகளுக்காக இந்தப் பணம் கொண்டுவரப்பட்டிருந்தது.மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.