Breaking News

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட விடயம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.