Breaking News

கொழும்பு துறைமுகத்தின் இரண்டு முனையங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்

கொழும்பு துறைமுகத்தின் ஜயா கொள்கலன் முனையம் மற்றும் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் சிக்கலை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஐவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

துறைமுகம் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயதுன்னே குழுவின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

மேலும் கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புஅமைச்சின் செயலாளர் எம்.பி.டி.யு.கே.மாப்பா பத்திரன, வீதி மற்றும் பெருந்தெருக்கள்
அமைச்சின் செயலாளர் ஆர்.டப்ளியூ.ஆர் பிரேமசிறி, மின்சாரம் மற்றும் கணிய வள அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுப் பெற்ற ஜெனரல் ஆர்.எம்.தயா ரத்னாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய அங்கத்தவர்களாவர்.

மேலும் இந்த குழு எதிர்வரும் 45 நாட்களுக்குள் குறித்த நிரல் அமைச்சுக்கள் மற்றும் தரப்பினர் தொடர்பாக அறிக்கையை முன்வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.