Breaking News

கொழும்பின் இரண்டு பகுதிகள் மீண்டும் முடக்கப்படுமா..?

கொழும்பு நகரின் இரண்டு பிரசேதங்களை மீண்டும் தனிமைப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு வடக்கு மற்றும் கொழும்பு மத்திய பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மீண்டும் சுகாதார ஆலோசனைகளை கவனத்திற் கொள்ளாமல் நடந்து கொள்வதாக சிவில் உடைகளில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பொலிஸார் அறிவித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

இதனால் அப்பகுதிகளில் மீண்டும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பத்தில் குறித்த பகுதிகளை மீண்டும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் அப்பகுதி மக்கள் அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.