இலங்கை

கொழும்பில் மாத்திரம் கடந்த 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4,917 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 22,061 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.