Breaking News

கொழும்பில் குண்டுவெடிக்கவுள்ளதாக தொலைபேசியில் தெரிவித்தவர் கைது !

 

கொழும்பில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து தெரிவித்த (119) நபர் ஒருவர் இன்று எல்ல நகரில் கைது செய்யப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எல்ல நகரத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்த கொழும்பு பொரளை குருப்பு மாவத்தைச் சேர்ந்த 57 வயது முஸ்லிம் நபர் ஒருவரையே எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேகநபர் கடந்த 12 ஆம் தேதி பொலிஸ் அவசர எண்ணுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்ததாகவும் அந்த தொலைபேசியின் சிம் மற்றொரு நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒன்றென பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.