இலங்கை

கொழும்பில் இன்று நடக்கவுள்ள முக்கிய சந்திப்புக்கள் !

நாளை பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ள சூழ்நிலையில் பல முக்கியமான அரசியல் சந்திப்புக்கள் இன்று கொழும்பில் நடக்கவுள்ளன .

பிரதமர் – கூட்டமைப்பு இன்று தீர்க்கமான சந்திப்பு !

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் சந்திப்பு இன்று நடக்கவுள்ளது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உட்பட்ட பல விடயங்கள் இதில் பேசப்படவுள்ளன.

மைத்ரி – மஹிந்த அணியினர் சந்திப்பு

வரவு செலவுத் திட்டத்தில் வாக்களிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தடுமாறிவரும் சுதந்திரக் கட்சி இன்று கூட்டு எதிர்க்கட்சியுடன் பேச்சு நடத்தவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் – பிரதமர் சந்திப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இன்று பிரதமரை சந்தித்து பேசவுள்ளது. கட்சி எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பல விடயங்கள் குறித்து இதன்போது பேசப்படவுள்ளன.

இவற்றைவிட இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளதாகவும் ஒரு தகவல் கூறியது.