இலங்கை

கொள்ளுப்பிட்டியில் தவிர்க்கப்பட்ட அனர்த்தம் !

கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெறவிருந்த பெரும் அனர்த்தம் ஒன்று பாதசாரி ஒருவரின் சமயோசித புத்தியினால் தவிர்க்கப்பட்டது.

கொள்ளுப்பிட்டியில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கி சுமார் 200 மீற்றர் தூரத்தில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த வெடிப்பை கண்ட ஒருவர் உடன் சற்று முன்னே சென்று அங்கு வந்து கொண்டிருந்த ரயிலை சைகைகளை காட்டி நிறுத்துமாறு கேட்டார்.

ரயில் நின்றவுடன் அங்கு வந்த அதிகாரிகள் தண்டவாளத்தை பார்வையிட்டு அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

ரயில் நிறுத்தப்பட்டிருக்காத பட்சத்தில் பெரும் அனர்த்தம் நடந்திருக்கலாமென்றும் ரயில் கடல் பக்கம் பாய்ந்திருக்கக் கூடுமென்றும் அங்கு பேசப்பட்டது.

( Thanks –  Mr. Harendran – senior Journalist )