இலங்கை

கொள்ளுப்பிட்டியில் இறுதி நாட்களை கழித்த சஹ்ரான் – மனைவி சாதியா வெளியிட்ட தகவல்கள் !

“நான் ஜிஹாத் ஆகப் போகிறேன் என்று கூறிய சஹ்ரான் , என்றுமில்லாமல் குழந்தைகளுடன் 18 ஆம் திகதி இரவு நீண்ட நேரம் விளையாடினார்.”

இவ்வாறு விசாரணையாளர்களிடம் சஹ்ரானின் மனைவி கூறியிருப்பதாக தெரிகிறது.

கொள்ளுப்பிட்டியில் உள்ள சொகுசு மாடிவீட்டு திட்டம் ஒன்றில் மாதம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபா வாடகைக்கு வீடொன்றை பெற்ற தற்கொலைதாரிகள் அங்கு தங்கியுள்ளனர்.

இங்கு வைத்தே தற்கொலைதாரிகள் ஸஹ்ரான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

விசாரணையாளர்கள் முன்னிலையில் சஹ்ரானின் மனைவி கூறியதாக சில தகவல்களை வெளியிட்டுள்ள சிங்கள ஊடகம் ஒன்று அதில் மேலும் கூறியுள்ளதாவது ,

கொள்ளுப்பிட்டி சொகுசு மாடி வீட்டு திட்டம் ஒன்றின் ஐந்தாம் மாடியில் மூன்று அறைகள் கொண்ட வீட்டில் நாங்கள் வசித்தோம் .கடந்த 18 ஆம் திகதி இரவு சாப்பாட்டுக்கு பின்னர் பிள்ளைகளுடன் நீண்ட நேரம் விளையாடினார் சஹ்ரான் .

அப்போது தாம் ஜிஹாத் ஆகப் போகிறார் என்று என்னிடம் கூறிய அவர் 4 மாதம் இத்தாவில் இருக்கும்படி கூறினார்.இப்படியான ஒரு வாழ்க்கை பயணத்திற்கு ஏன் என்னை அழைத்துவந்தீர்கள் என்று கேட்டேன்.நாரம்மலையில் உள்ள எனது வீட்டில் விடுமாறு நான் கூறினாலும் அவர் அதை கேட்கவில்லை.பல தடவை அவரிடம் விவாகரத்து செய்ய கூறியிருந்தேன். அவை கைகூடவில்லை.விவாகரத்து செய்ய மறுத்துவிட்டார்.

21 ஆம் திகதி நாங்கள் சாய்ந்தமருதில் இருந்தோம்.எங்கள் ரீம் தற்கொலை செய்துகொண்டுவிட்டதால் நாங்கள் வெள்ளை நிற ஆடைகளை அணிவோமென றிழ்வானின் மனைவி என்னிடம் கூறினார்.ஸஹ்ரான் இப்படி செய்தமை குறித்து கவலையடைந்த அவரின் தாயார் எதற்கும் கவலைப்பட வேண்டாமென எங்களை தேற்றினார்.

புர்க்காவை அணிவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் எங்கு சென்றாலும் புர்க்கா அணிந்து செல்ல சொல்லும் ஸஹ்ரான் நான் எங்கிருந்தாலும் என்னுடன் தொலைபேசியில் பேசுவார்.புர்க்காவை அணிந்து செல்வது பாதுகாப்புக்கு உகந்தது என்று அவர் அடிக்கடி கூறுவார்.

என்னுடன் இருந்த சஹ்ரா மற்றும் பெரோசாவின் கணவன்மார்கள் தற்கொலை தாக்குதலில் இறந்தனர்.அப்படி அவர்கள் இறந்தது பெருமையாக இருப்பதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்..”

என்றும் சாதியா கூறியதாக அதில் சொல்லப்பட்டுள்ளது.