உலகம்

கொள்கலனில்  39 பேரின் சடலங்கள் – இங்கிலாந்தில் துயரம் இங்கிலாந்தின், எசெக்ஸில் அமைந்துள்ள தொழிற்சாலைப் பகுதியில் கொள்கலனில் இருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சடலங்களில் ஒரு சிறுவனுடைய சடலமும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரேஸின், கிழக்கு அவென்யூவில் உள்ள வோட்டர்கிளேட் தொழில்துறை பூங்காவில் இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த லொரி பல்கேரியாவிலிருந்து பயணம் செய்து ஹோலிஹெட், ஆங்லெஸி வழியாக சனிக்கிழமை நாட்டிற்குள் நுழைந்துள்ளதா பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

“இந்த சம்பவம் தொடர்பாக லொரியின் சாரதியை நாங்கள் கைது செய்துள்ளோம், அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன’ என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த துயரமான சம்பவத்தால் தான் திகைத்துப் போனதாக, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.