உலகம்

கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்றார் டைகர் வுட்ஸ்

அமெரிக்காவின் பிரபல கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சொந்தமாக புளோரிடாவில் உள்ள விடுதி ஒன்றில் முகாமையாளராக இருந்த ஒருவர் கடந்த வருடம் விபத்தொன்றில் உயிரிழந்தார்.

அவர், குறித்த விடுதியில் அதிகமாக மதுவை உட்கொண்டதன் காரணமாக விபத்தில் சிக்கியதாக தெரிவித்து, அவரது குடும்பத்தார் வுட்சுக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருந்தனர்.

எனினும் வுட்சுக்கும் இந்த வழக்குக்கும் நேரடியாக சம்பந்தமில்லை என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டிருந்த நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தார் வழக்கில் இருந்து வுட்சை நீக்கியுள்ளனர்.