உலகம்

கொலம்பியாவில் இராணுவ ஹெலி விபத்துகொலம்பியாவில் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று மத்திய குண்டினமர்கா பிராந்தியத்தில் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த ஐந்து ஊழியர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக கொலம்பியாவின் விமானப்படை தெரிவித்துள்ளது.மெல்கர்-டோலிமாவில்  உள்ள கட்டளை முகாமிலிருந்து, குண்டினாமர்காவில் உள்ள மட்ரிட் நகரில் அமைந்துள்ள விமான தளத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தத ஹெலிகொப்டரே விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிர் தப்பிய இருவருமே ஆபத்தான நிலையில் இருப்பதாக, குண்டினாமர்காவின் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அண்மையிலுள்ள, நகரங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும்,  விமானப்படை மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த மீட்புக் குழுக்களும் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.