இலங்கை

கொலன்னாவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு..

கொலன்னாவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நேற்று (26) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

கொலன்னாவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பிரசன்ன சோலங்கஆரச்சியின் வழிகாட்டலில் கொடிகாவத்தை சந்தியில் இந்த புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, குமார வெல்கம, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர ஆகியோர் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.