Breaking News

கொரோனா வைரஸ் 20 நாடுகளுக்கு பரவல்

 

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் பல நாடுகளுக்கும் பரவியதையடுத்து உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

சீனாவில் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் இரு மாகாணங்கள் உட்பட உலகின் 20 நாடுகளில் வைரஸ் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, ஹொங்கொங், ஜப்பான், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, தாய்வான், மலேசியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியதையடுத்து உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகனப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக, ஐந்து தடவைகள் சர்வதேச அளவில் உலக சுகாதார ஸ்தாபனம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. (2009 – எச்1என்1, 2014 – போலியோ, 2014 – எபோலா, (வட ஆபிரிக்கா) 2016 – ஜிகா 2019 – எபோலா, (கொங்கோ) )

சீனாவில் கொரோனா வைரசால் 213 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் அதிகாமானோருக்கு நோய் பாதிப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

சீனா – 9,776
அமெரிக்கா – 5
தென்கொரியா – 6
தாய்லாந்து – 14
ஹொங்கொங் – 10
ஜப்பான் – 11
சிங்கப்பூர் – 10
அவுஸ்திரேலியா – 7
தாய்வான் – 8
மலேசியா – 8
பிரான்ஸ் – 5
ஜேர்மனி – 4
ஐக்கிய அரபு இராச்சியம் – 4
வியட்நாம் – 4
கனடா – 3
கம்போடியா – 1
பின்லாந்து – 1
இந்தியா – 1
நேபாளம் – 1
பிலிப்பைன்ஸ் – 1
இலங்கை – 1