Breaking News

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 1483 ஆக உயர்வு !

 

சீனாவில் கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள ‘கொரோனா ‘ என்ற கொடிய வைரஸ் சீனாவில் துவங்கி ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,483 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 64,600 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானின் யோகோஹாமில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 218 பேருக்கு கோவிட் -19 என்ற ‘கொரோனா’ வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.