Breaking News

கொரோனா வைரஸ் – தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 170 ஆனது !

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது .

நேற்று மாலை முதல் இதுவரை ஹோமாகம மருத்துவமனையில் எட்டு நோயாளிகளில் 3 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புத்தளம் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திலிருந்து ஒருவர் அடையாளம் காணப்பட்டார்..

மாத்தறையில் இருந்து மற்றொரு நபர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கொரோனா வைரஸ் தொற்று இருந்த ஒருவரிடம் பழகியதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து இரண்டு நோயாளிகளும், நீர்கொழும்பில் இருந்து ஒருவருமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.