Breaking News

‘கொரோனா’ வைரஸ் : சீனாவில் 1,868 பேர் பலி

 

சீனாவில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1,868 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 72 ஆயிரத்து, 436 பேருக்கு, இதன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சீனாவில், கடந்தாண்டு டிசம்பரில் துவங்கிய, கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. சீனாவின் 34 மாகாணங்களில், 31 மாகாணங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 18 முக்கிய நகரங்கள் உள்ள ஹூபய் மாகாணத்தில், மிக அதிகமாக பாதிப்பு உள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பு முதலில் தென்பட்ட வூஹான் நகரில், பலி எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. நேற்றைய தினம் மட்டும் 98 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை, 1,868 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக, 1,888 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து, 72 ஆயிரத்து, 436 பேருக்கு, இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.