Breaking News

கொரோனா வைரஸ் – உலக உயிரிழப்பு 21 ஆயிரத்தை தாண்டியது !

 

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 283 ஆக ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தோற்றுவாயான சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், உலகம் முழும் 180 நாடுகளுக்கு மேல் வைரஸ் தொற்று பரவி நாளுக்கு நாள் அச்சுறுத்தலை அதிகப்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை 21,283 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் 4 லட்சத்து 71 ஆயிரத்து 60 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 1035 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.கன்னியாகுமரியில் வைரஸ் தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

8 மணித்தியாலத்திற்கு முன்னர் உலக அளவில் இந்த உயிரிழப்பு நிலை இருந்தது –

Italy: 7503
Spain: 3445
China: 3281
Iran: 2077
France: 1331
US: 893
UK: 422
Netherlands: 357
Germany: 206
Belgium: 178
Switzerland: 153
South Korea: 126
Indonesia: 58
Brazil: 46
Turkey: 44
Portugal: 43
Japan: 42

இதேவேளை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமானவரின் இரத்தம் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியை சீனா மேற்கொண்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டறிய பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தில் இருந்து சிகிச்சை மேற்கொள்ளும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

குணமடைந்தவரின் உடலில் கொரோனா வைரசுக்கு எதிரான எதிர் உயிரிகள் வளர்ந்திருக்கும் எனவும், அதனை கொண்டு மற்றவர்களை குணப்படுத்த உதவியாக இருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா அணுக்களை பிரித்தெடுத்து அது சிகிச்சை தேவைப்படுபவரின் உடலில் செலுத்தப்படும். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவரின் உடலில் அவ்வைரஸுக்கு எதிரான எதிர் உயிரிகள் வளர்ந்திருக்கும் என்றும் இவை மற்றவர்களை குணப்படுத்த உதவிகரமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதேமுறையில் சிகிச்சை அளிக்க அமெரிக்க டாக்டர்களும் அந்நாட்டு மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலை கோரியுள்ளனர். இது குறித்து வொஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக டாக்டர் ஜெவ்ரி ஹென்டர்சன் கூறுகையில்,

”இது மிகப்பழங்கால நடைமுறைதான். பல்வேறு தொற்று நோய்களுக்கு சிகிச்சை தர இம்முறை வெகுவாக பயன்தந்துள்ளது. ஆனால், இதே நடைமுறையிலான சிகிச்சை, கொரோனாவை குணப்படுத்த எந்தளவிற்கு உதவும் என்பது பரிசோதனைகளுக்கு பின்பே தெரியும்” எனக்கூறினார்.

இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஆய்வில் 69 வைரஸ் தடுப்பு மருந்துகள், சோதனையில் உள்ளன. அவற்றில் 24 மருந்துகள் தீவிர ஆய்வில் உள்ளன. அன்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் தடுப்பு மருந்துகள், பிற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளவை. அவற்றை, கோவிட்-19க்கு எதிராக பயன்படுத்தினால் உயிரிழப்புகளை குறைக்க முடியும்.

நுரையீரல் பாதிப்பு

கொரோனா வைரஸ், மனித நுரையீரலில் நுழைந்து, தனது மரபணுக்களை செலுத்தி, வைரஸ் புரதங்களை உருவாக்குகிறது. பிறகு அதிலிருந்து லட்சக்கணக்கான புதிய வைரஸ்கள் உருவாகி நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த புதிய ஆய்வில், கொரோனா வைரஸின் 29 மரபணுக்களில் 26ஐ ஆய்வு செய்ததில், அவை வைரஸ் புரதங்களின் நேரடி உற்பத்தியாக இருந்தது. மனிதனில் உள்ள 332 புரோட்டின்களை கொரோனா வைரஸ் பாதிக்கிறது என்பதை கண்டறிந்தனர்.

சில வைரஸ் புரதங்கள், ஒரே ஒரு மனித புரோட்டின்னை பாதிக்கின்றன. மற்ற வைரஸ் புரதங்கள், 12 மனித செல்லுலர் புரோட்டின்களை தாக்குகின்றன. இம்மருந்துகளை கொரோனாவுக்கு எதிராக சோதனை செய்ததில், கொரோனா வைரஸை அழிப்பததோடு, அதன் பக்கவிளைவாக, மனித செல்லுலர் புரதங்களையும் பாதிக்கிறது. கொரோனா எதிர்ப்பு மருந்துகளில் ஒன்றான மலேரியாவுக்கு எதிராக தரப்படும் வைரஸ் தடுப்பு மருந்து குளோரோ குயின். இம்மருந்து, சிக்மா-1 எற்பி(ரிசப்டர்)எனப்படும், மனித செல்லுலர் உடன் இணைந்து கொள்ளும். இந்த ரிசப்டரையும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் நிறுவனத்தின் இயக்குநர்கள் டாக்டர் அந்தோனி, பாசி கூறும்போது, சோதனை தடுப்பு மருந்துகளில் கொரோனாவுக்கு எதிரான தீவிரமான எதிர்ப்பு மருந்தாகவும், பாதுகாப்பானதாகவும் குளோரோ குயின் செயல்படுகிறது என்றார்.

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வரும் நிலையில், ஜி 20 மாநாடுகளின் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். வீடியோ கன்பரன்சிங் மூலமாக இது நடைபெறும் .

ஜி – 20 அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடம்பெற்றுள்ளன.

கேரளத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவா், ஹெச்ஐவி மருந்துகளால் குணமடைந்துள்ளாா்.

இதுகுறித்து எா்ணாகுளம் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பிரிட்டனைச் சோ்ந்த 19 போ், விடுமுறையைக் கழிப்பதற்காக மூணாறுக்கு வந்திருந்தனா். அவா்களில் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், எா்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, எா்ணாகுளம் மருத்துவக் கல்லூரி முதல்வா் தோமஸ் மத்யூ தலைமையிலான மருத்துவா்கள், அவருக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினா்.

அந்த நோயாளிக்கு ஹெச்ஐவி நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ரிடோனாவிா், லோபினாவிா் ஆகிய மருந்துகள் கொடுக்கப்பட்டன. இந்த மருந்துகளை பொருத்தமான நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது.

அதன்படி,கொரோனா நோயாளிக்கு அந்த மருந்துகளை கொடுக்க மாநில மருத்துவ சபை அனுமதியளித்தது.

அதைத் தொடா்ந்து, அந்த நோயாளிக்கு 7 நாள்கள் ஹெச்ஐவி மருந்துகள் கொடுக்கப்பட்டன. பின்னா், அவருடைய ரத்த மாதிரிகளை மீண்டும் பரிசோதனை செய்ததில், கரோனா பாதிப்பில் இருந்து அவா் குணமடைந்தது தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு ஹெச்ஐவி மருந்துகள் கொடுக்கப்பட்டன. இருப்பினும், கேரளத்தில் கொரோனா நோயாளிக்கு அந்த மருந்துகள் கொடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.