Breaking News

கொரோனா வைரஸ் – இலங்கையின் முதல் உயிரிழப்பு பதிவானது !

 

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளாரென அறிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்த முதலாம் நபர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தாரென மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.அவர் மாரவில பகுதியை சேர்ந்தவர்.