Breaking News

கொரோனா வைரஸால் உலக உயிரிழப்பு 32 ஆயிரத்தை தாண்டியது -ஒரு பார்வை !

 

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை உலகளவில் 32 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான போராடி வருகின்றன. இருந்தபோதிலும், பாதித்தோரின் எண்ணிக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 6,83,694 ஆக உள்ளது. இதில், 1,46,396 பேர் குணமடைந்துள்ளனர். 32,155 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டில் பாதித்தோரின் எண்ணிக்கை 1,23,828 ஆக உள்ளது. அதிகம் பலியானோர் எண்ணிக்கையில், இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 10,023 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 1024 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது.

30 ஆயிரம் பேரை பாதித்திருந்த இந்த வைரஸ் ஜேர்மனியில் கடந்த ஐந்து நாட்களுக்குள் 60 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

நெதர்லாந்து

Netherlands reports 1,104 new cases of coronavirus and 132 new deaths.

A total of 10,866 cases and 771 deaths.

பெல்ஜியம்

Belgium reports 1,702 new cases of coronavirus and 78 new deaths.

A total of 10,836 cases and 431 deaths.

இங்கிலாந்து

UK reports 2,433 new cases of coronavirus and 209 new deaths.

A total of 19,522 cases and 1,228 deaths.

போர்த்துக்கல்

Portugal reports 792 new cases of coronavirus, 5,962 cases in total.

119 deaths, 43 recovered.

ஈரான்

Iran reports 2,901 new cases of coronavirus today and 123 new deaths.

A total of 38,309 cases and 2,640 deaths.

உலக அளவில் பாதிக்கப்பட்ட விபரங்கள் –

US: 124,697
Italy: 92,472
China: 81,439
Spain: 78,797
Germany: 58,137
France: 37,611
Iran: 35,408
UK: 17,136
Switzerland: 14,352
Belgium: 10,836
Netherlands: 9,819
S Korea: 9,583
Austria: 8,291
Turkey: 7,402
Canada: 5,607
Portugal: 5,170
Norway: 4,048

 

இஸ்ரேல் விஞ்ஞானி பேட்டி

சீனாவில் உயிரியல் ஆய்வுக்கூடத்தின் மூலம் கரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக இஸ்ரேல் விஞ்ஞானி பேட்டியளித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து திடுக்கிடும் தகவல்களை இஸ்ரேல் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு முன்னாள் அதிகாரியும், உயிரியல் விஞ்ஞானியுமான டேனி ஷோஹம், தி வொஷிங்ரன் ரைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,

உலக நாடுகளுக்குத் தெரியாமல் சீனா உயிரியல் -ஆயுதம் தயாரிக்கும் ஆய்வுக்கூடங்களை வுஹானில் சீன அரசு உருவாக்கி நடத்தி வந்தது. மனிதர்களைக் கொல்லும் கிருமிகள் உருவாக்கப்படுவது குறித்து உலகநாடுகளுக்கு தெரியவந்ததும், அதுபோன்ற ஆய்வுக்கூடம் இல்லை என்று சீனா மறுத்தது.

ஆனால் இந்த ஆய்வுக்கூடங்களில் இருந்து காரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். கடந்த வருடம் ஜூலையில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரையின்படி சீனாவின் வுஹான் நகரில் இதுபோன்று 4 பெரிய ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாக அறிந்தபோது இந்த தகவல்கள் கிடைத்தன.

இந்த ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் அல்லது பணியாளர்கள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு பரவியிருக்கலாம் அல்லது ஆய்வுக்கூடத்தில் ஏற்பட்ட கசிவு காரணமாக பரவியிருக்கலாம். ஆனால், இதற்கான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்தார்.

இஸ்ரேலைச் ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய லியுடினன்ட் கோலோனல் டேனி ஷோஹம், கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் உலகளவில் உயிரியல் தொடர்பான ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

கனடா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமர் மனைவி சோபி கிரகோயர் ட்ரூடோ குமணடைந்தார் என ஒட்டாவா பொது சுகாதாரத்துறை அறிவித்தது. பிரதமரின் மனைவி நேற்று(மார்ச்-28) சமூக ஊடகத்தில், “இப்போது நான் நன்றாக உணர்கிறேன். கொரோனா சிகிச்சை பெறுவோறுக்கு தனது அன்பை தெரிவிப்பதாக” கூறினார்.

 

கனடாவில், கொரோனாவால் 5,655 பேர் பாதிப்படைந்துள்ளனர். 60 உயிரிழந்துள்ளனர். 508 பேர் குணமடைந்துள்ளனர். சமீபத்தில் லண்டன் சென்று திரும்பிய பிறகு, சோபி கிரகோயர் ட்ரூடோவின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 12ல் அவருக்கு கொரோனா இருப்பதாக பிரதமர் அலுவலகம் அறிவித்தது. இந்நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது குழந்தைகள் மூவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். இவர்களுக்கு கொரோனா அறிகுறி தென்படவில்லை.

பிரதமர் மனைவி சமூக ஊடகத்தில் கூறியதாவது: “இப்போது எனது உடல்நலம் நன்றாக இருப்பதை உணர்கிறேன். என் இதயத்தின் அடியிலிருந்து கூறுகிறேன். நல்மனதுடன் எனது நலத்தை விரும்பிய அனைவருக்கும் எனது நன்றிகள். கொரோனாவால் சிகிச்சை பெறுவோருக்கு எனது அன்பை தெரிவித்து கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரவித்துள்ளார்.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ – மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்து முன்மாதிரியாக இருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

============

உலகையே கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, 2,227 பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிகபட்ச உயிரிழப்பை கொண்டுள்ள நாடுகளில் இத்தாலி முன்னிலையில் உள்ளது. அங்கு 92 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 10,023 பேர் பலியாகியுள்ளனர்.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் வெளிநாடு சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 12.12 மணியளவில் முதியவர் உயிரிழந்தார். பெப்ரவரி 29ம் தேதி சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மார்ச் 2ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதன் பின்னர் அவர் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலையில் பல்வேறு பிரச்னைகள் இருந்த நிலையில், 27 நாள் சிகிச்சைக்கு பின் உயிரிழந்தார். அவருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைபர்லிபிடமியா பிரச்னைகள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், ஸ்பெயின் நாட்டிலும் பரவிய கொரோனா தொற்றால், அந்நாட்டு இளவரசி மரியா தெரசா (வயது 86) பாதிக்கப்பட்டு, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்தார். வைரஸ் தொற்றின் காரணமாக அவர் உயிரிழந்தார். அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பலியானது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று நோய் சுமார் 195 நாடுகளை பாதித்துள்ளது. பல நாடுகள் மக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க உத்தரவிட்டுள்ளது. பொதுநிகழ்ச்சிகள், வணிக வளாகங்கள் , திரையரங்கம், அலுவலகம் என பலவற்றுக்கு மக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் 6 மாதம் தங்கள் எல்லையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக மக்கள் வெளியே வரக்கூடாது என பல உத்தரவுகளை உலக நாடுகள் பிறப்பித்துள்ள நிலையில், சுமார் 12 கோடிக்கும் மேலான மக்கள் வாழும் நாடாகவும், தொழில்துறையில் சிறந்து விளங்கும் நாடாகவும், அதிக முதியவர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ள ஜப்பான், மிக சாதாரணமாக இயங்குகிறது. மக்கள் அலுவலகம் செல்கின்றனர், குறிப்பிட்ட சில அலுவலகங்கள் மட்டுமே வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. உணவகங்கள், பார், திரையரங்கம் என அனைத்தும் திறந்திருக்கின்றன

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், ஜப்பான் நாட்டிலும் பரவியது. அங்கும் 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரையிலும் 49 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் அங்குள்ள மக்களுக்கு எந்த தடையும் இல்லை. வாடகை கார் எடுத்து ஜப்பான் மத்தியில் இருந்து நாட்டு எல்லை வரை சென்று திரும்ப முடியும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது, வாகனங்கள் சோதனையிடப்படுகிறன , ஆனால் பயணம் செய்யத் தடை இல்லை. பாதுகாப்பு நடவடிக்கையாக பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் கொரோனாவுள்ளதால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன .

ஜப்பான் சுலபமாகக் கையாண்டது எப்படி?

ஜப்பானில் முக கவசத்தின் பயன்பாடு அதிகம், சாதாரண காய்ச்சல், சளி இருந்தாலே அவர்கள் முக கவசத்தை பயன்படுத்துகின்றனர். மேலும் வணிக வளாகங்கள் ஹோட்டல் என மக்கள் கூடும் இடங்களில் சனிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்று அதிகம் பரவாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள் தங்களின் பாதுகாப்பையும், பிறரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நடந்து கொள்வதாகவும், சுகாதாரத்தை பின்பற்றுவதாகவும் ஜப்பான் மக்கள் கூறுகின்றனர்.

உலக மக்கள் இனியாவது சுகாதாரமாக தங்களது சுற்றத்தை வைத்துக்கொள்வது, சாதாரண காய்ச்சல், சளி இருந்தாலே முக கவசம் பயன்படுத்துவது போன்ற செயலில் ஈடுபட்டால், பல பெரிய நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

 

இந்திய பாதிப்பு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது