Breaking News

கொரோனா வைரஸால் உலக உயிரிழப்பு 40 ஆயிரத்தை தாண்டியது !

 

கொரோனா வைரஸால் உலக உயிரிழப்பு 40 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது . உலக அளவில் பாதிப்புற்றோர் 8 லட்சத்து 24 ஆயிரத்து 560 பேராக அதிகரித்துள்ளது.ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 359 பேர் குணமடைந்துள்ளனர்.

இத்தாலியில் புதிதாக 837 மரணங்கள் நடந்துள்ளன.

Italy reports 4,053 new cases of coronavirus and 837 new deaths.

Total of 105,792 cases and 12,428 deaths.

இங்கிலாந்தில் 381 புதிய மரணங்கள் நடந்துள்ளன.

UK reports 3,009 new cases of coronavirus and 381 new deaths.

A total of 25,150 cases and 1,789 deaths.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 1403 ஆக உயர்ந்துள்ளது. இதில், 124 பேர் குணமடைந்துள்ளனர். 47பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளம் உள்ளது. அங்கு இதுவரை 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 101 பேரும், தில்லியில் 97 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 39 பேர் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் இன்று உறுதி செய்யப்பட்ட 72 பேர், தமிழகத்தில் உறுதி செய்யப்பட்ட 57 பேர் உள்ளிட்ட எண்ணிக்கைகள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

“சென்னையில் மேலும் 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 45 பேர் தில்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள். தமிழகத்தில் இருந்து 1,500 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதில், 1,131 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். மற்றவர்கள் அங்கேயே இருந்துள்ளனர். இந்த 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 45 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களே தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பாதித்தவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராகவே உள்ளது.” என்றார்.

இதன்மூலம் தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.