Breaking News

கொரோனா தொற்று; தென்கொரியாவில் 16 பேர் பலி

594 நோய்த் தொற்றாளர்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ள நிலையில், தென் கொரியாவில்  மொத்த கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2,931 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் மூன்று உயிரிழப்புகள் புதிதாக பதிவாகியுள்ள நிலையில், மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது.

புதிய நோயாளிகளில்இ  476 பேர் தலைநகர் சியோலுக்கு தென்கிழக்கில்  உள்ள டேகுவில் வசிப்பவர்கள் எனவும், 60 பேர் அதனை சுற்றியுள்ள வடக்கு கியோங்சாங் மாகாணத்திலிருந்து வந்தவர்கள் னவும், கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

டேகு மற்றும் வடக்கு கியோங்சாங் மாகாணத்தில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை முறையே 2055 மற்றும் 469 ஆக அதிகரித்துள்ளது.

ஜனவரி 3ஆம் திகதி முதல 85,000ற்கும் மேற்பட்டவர்களை தென்கொரியா பரிசோதித்துள்ளது.  அவர்களில் 53,608  பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஏனையவர்கள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.