Breaking News

கொரோனா தொற்றாளர்கள் இருவர் கண்டுபிடிப்பு – மொத்தம் 106


கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மொத்தமாக 106 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை அனைத்து அரச ஊழியர்களினதும் ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் அடுத்தமாதம் 10ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவுள்ளது.

நிதி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

அதே நேரம் ஓய்வூதிய கொடுப்பனவும் அடுத்தமாதம் 3ம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை ஏப்ரல் 10வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.