Breaking News

கொரோனா சீனாவின் உயிரியல் ஆயுதம் : 20 டிரில்லியன் டொலர் நஷ்டஈடு கோரி வழக்கு

 

‘கொரோனா எனும் உயிரியல் ஆயுதத்தை (பயோ வெப்பன்) திட்டமிட்டுப் பரப்பிய சீனா, 20 டிரில்லியன் டொலர்களை நஷ்டஈடாக வழங்க வேண்டும்’ எனக் கோரி, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது. அங்கு, சீனாவின் மிகப் பெரிய ‘வைரலொஜி’ ஆய்வு நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கும் என, உலக நாடுகள் சந்தேகம் தெரிவித்தன.

இதையடுத்து, ‘அமெரிக்க ராணுவ வீரர்கள்தான், வூஹானில் கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்தனர்’ என, சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் குற்றம்சாட்டினார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கொரோனாவை ‘சீன வைரைஸ்’ எனக் குறிப்பிட்டார்.அதன்பின், இரு நாடுகளும் மாறி மாறி, தங்களது நாட்டில் பணியாற்றும் எதிரி நாட்டின் பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றின.

இந்நிலையில், அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில், வொஷிங்டனைச் சேர்ந்த ப்ரீடம் வொட்ச் வழக்கறிஞர்கள் குழுவும், அமெரிக்க செனட்டர் லேரி கிளேமேனும் இணைந்து, சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பயோலொஜிக்கல் ஆயுதம்!

வழக்கு மனுவில், ”கொரோனா வைரஸ் ஒரு ‘பயோலொஜிக்கல் ஆயுதம்’. ஒரு மனிதரிடத்தில் இருந்து மற்றவருக்கு எளிதாக தொற்றும்படி அதை சீனா வடிவமைத்துள்ளது .
அந்த வைரசால், உலகில் 3,34,000 பேர் தாக்கப்பட்டுள்ளனர்; 17,000 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மிகுந்த ஆபத்து நிறைந்தது. உலக பொதுச்சட்டத்தை மீறி இந்த வைரசை சீனா உருவாக்கி பரப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு 20 டிரில்லியன் அமெரிக்க டொலர்களை, சீனா நஷ்ட ஈடாக தர வேண்டும்’ எனக் கோரியுள்ளனர்.