Breaking News

கொரோனா உலக உயிரிழப்பு 80 ஆயிரத்தை நெருங்கும் துயரம் !

 

கொரோனா வைரஸ் தாக்கி உலகளவில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 13 லட்சத்து 86 ஆயிரத்து 820 பேராக உயர்ந்துள்ளது.

இதுவரை உலகளவில் 79 ஆயிரத்து 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரத்து 743 பேர் பாதிக்கப்பட்டு 11 ஆயிரத்து 907 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 511 பேர் பாதிக்கப்பட்டு 13 ஆயிரத்து 897 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் இதுவரை ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 586 பேர் பாதிக்கப்பட்டு 17 ஆயிரத்து 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜேர்மனியில் இதுவரை ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 519 பேர் பாதிக்கப்பட்டு ஆயிரத்து 902 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் இதுவரை 98 ஆயிரத்து 10 பேர் பாதிக்கப்பட்டு 8 ஆயிரத்து 911 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 5 ஆயிரத்து 172 பேர் பாதிக்கப்பட்டு 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.அதில் 3 ஆயிரத்து 634 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் மட்டும் 8147 புதிய நோயாளர்களும் 731 புதிய மரணங்களும் பதிவாகியுள்ளன

 

கொரோனாவால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு குறைவு: ஆய்வில் தகவல்

கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகும் மற்றவர்களை விட, கர்ப்பிணி பெண்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்படுவதில்லை என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணி பெண்களுகு பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 43 கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் மகப்பேறியல் மற்றும் பெண் நோயியல் இதழில் வெளியாகியுள்ளது.
மார்ச்.13 முதல் 27 வரை இரு வாரங்கள் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 80 சதவீதம் பேருக்கு , அதாவது 37 கர்ப்பிணி பெண்களுக்கு லேசான தொற்றும், 15 சதவீதம் பேருக்கு தீவிரமான கொரோனா தொற்றும், 5 சதவீதம் அதாவது 2 பெண்களுக்கு மோசமான தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொரொனா தொற்று உறுதியான 29 கர்ப்பிணி பெண்களில் சாதாரண அறிகுறியுடன் உள்ள 25 பேர் வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படும் அளவுக்கு இருப்பதாகவும், அவர்களுக்கு ஒக்ஸிஜன் மற்றும் மருத்துவ சிகிச்சை உதவியோ தேவையில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த எந்தவொரு குழந்தைக்கும் கொரோனா தொற்று இல்லை என பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் உறுதியாகியுள்ளது.

முந்தைய சார்ஸ் மற்றும் ஹெச்.ஒன்.என்.ஒன் தொற்றுநோய்களின் போது பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களின் வெளிப்படுத்திய முடிவுகள், தற்போதைய ஆய்வு முடிவுகளில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டதாகும். இரண்டு தொற்று நோய்களால் கர்ப்பிணி பெண்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியிருந்தனர் . மேலும் பொதுமக்களோடு ஒப்பிடும் போது கர்ப்பிணி பெண்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் உண்மையான ஆபத்தின் அளவைப் புரிந்து கொள்ள கூடுதல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நோயாளிகள், குடும்பங்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க கர்ப்பிணி பெண்களை மருத்துவமனை சோதனை நடத்த வேண்டுமென ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது 14 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா அறிகுறி எதுவும் தென்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் அல்லது அனைத்து மகப்பேறியல் சோதனைகள் வழங்க துவங்கிய பின்னர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஆபத்தான பரிசோதனை கூடம் கட்டியதா சீனா?

சீனாவின் வூஹான் மாநிலத்தில் இருந்து கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி உள்ளது. இந்நிலையில் உலகின் அதி நவீன வைரொலஜி பரிசோதனை கூடம் வூஹானில் உள்ளது. இதில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உள்ளது என ஐரோப்பிய விஞ்ஞானிகளால் நம்பப் படுகிறது. இது தற்போது உறுதி ஆகி உள்ளது.

வூஹானில் 2017ம் ஆண்டு வைரஸ் பரிசோதனை மையம் கட்ட அனுமதி வழங்கப்பட்டபோது அண்டை நாட்டு விஞ்ஞானிகள் வைரஸ் சோதனையின்போது வெளியே கசியும் அபாயம் உள்ளது என எச்சரித்தனர். அதனை மீறி சீன மைக்ரோபயாலஜி சோதனை அங்கீகாரம் வழங்கும் அமைப்பு அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.
சீன இறைச்சி உணவு கடைகளில் இருந்து இந்த வைரலொஜி கூடம் 200 மீட்டர் தொலைவிலேயே உள்ளது. ஆனால் உணவுக்காக பயன்படுத்தப்படும் இறைச்சி மூலமாகவே கோவிட்-19 பரவியது எனப்படுகிறது.

கோவொட்-19 ஜீன்களில் 90 சதவீதம் வெளவால்கள் ஜீன்களோடு பொருந்துகிறது. 2017ம் ஆண்டுக்கு முன்னர் பிஎஸ்எல்- 4 ரக வைரஸ் சோதனை லேப்கள் சீனாவில் இல்லை. தைவானில் நான்கு பிஎஸ்எல்- 4 ரக வைரஸ் சோதனை ஆய்வுக்கூடங்கள் உள்ளன.
இதனையடுத்து வூஹானில் இந்த வகை ஆய்வுக்கூடங்கள் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி கட்டப்பட்டன. விஞ்ஞானிகள் கணித்ததுபோலவே மிகவும் ஆபத்தான இந்த வகை கூடங்களில் இருந்து கோவிட்-19 கசிந்துள்ளது. சீனா விஞ்ஞானிகள் மத்தியில் இது தற்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் மைக்ரோபயாலஜி விஞ்ஞானிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் தற்போது நடந்த தவறுக்கு வருந்துவதில் அர்த்தமில்லை. கொரோனா வைரஸை உலகில் இருந்து அடியோடு ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ளன. கொரோனா முற்றிலும் அழிந்த பின்னரே இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.