Breaking News

கொரோனா – உலக அளவு பாதிப்பு 14 லட்சத்தை தாண்டியது – 3 லட்சம் பேர் குணமடைந்தனர்

 

கொரோனா வைரஸ் தாக்கி உலகளவில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 14 லட்சத்து 31 ஆயிரத்து 689 பேராக உயர்ந்துள்ளது.

இதுவரை உலகளவில் 82 ஆயிரத்து 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை 4 லட்சத்து 412 பேர் பாதிக்கப்பட்டு 12ஆயிரத்து 854 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் இதுவரை ஒரு லட்சத்து 41ஆயிரத்து 942 பேர் பாதிக்கப்பட்டு 14 ஆயிரத்து 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் இதுவரை ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 586 பேர் பாதிக்கப்பட்டு 17 ஆயிரத்து 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜேர்மனியில் இதுவரை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 663 பேர் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்து 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் இதுவரை ஓரு லட்சத்து 9 ஆயிரத்து 69 பேர் பாதிக்கப்பட்டு 10 ஆயிரத்து 328 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 5 ஆயிரத்து 351 பேர் பாதிக்கப்பட்டு 160 பேர் உயிரிழந்துள்ளனர்.உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்து 145 ஆக உயர்ந்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் சீன சார்பு செயற்பாடுகளை கொண்டிருப்பதால் அதற்கு நிதியுதவிகளை வழங்குவதை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.