Breaking News

கொரோனா உலகளவு உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது !

 

கொரோனா வைரஸ் தாக்கி உலகளவில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 16 லட்சத்து 03ஆயிரத்து 719 பேராக உயர்ந்துள்ளது.

இதுவரை உலகளவில் 95 ஆயிரத்து 722 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை 4 லட்சத்து 68 ஆயிரத்து 566 பேர் பாதிக்கப்பட்டு 16 ஆயிரத்து 691 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் இதுவரை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டு 15 ஆயிரத்து 447 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 626 பேர் பாதிக்கப்பட்டு 18 ஆயிரத்து 279 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜேர்மனியில் இதுவரை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்து 607 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் இதுவரை ஓரு லட்சத்து 17 ஆயிரத்து 749 பேர் பாதிக்கப்பட்டு 12 ஆயிரத்து 210 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 6 ஆயிரத்து 725 பேர் பாதிக்கப்பட்டு 227 பேர் உயிரிழந்துள்ளனர்.உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 56 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது.

டாக்டர்கள் பலி

கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் இத்தாலியில், கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்த 100 டாக்டர்கள் இதுவரை பலியாகி உள்ளனர். டாக்டர்கள், தாதியர் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கொரோனாவுக்கு எதிராக போராடுவதாக அந்நாட்டு டாக்டர்கள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.

உலக அளவில் அதிக உயிர்பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ், ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலியில் கொரோனா தாக்குதலில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 18,279 பேர் உயிரிழந்துள்ளனர். 1,43,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இத்தாலியில் கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் டாக்டர்கள் உயிரிழப்பு 100 ஐ கடந்துள்ளது என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே 30 மருத்துவ பணியாளர்கள், தாதியர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதமின்றி போரா..?

இதுகுறித்து இத்தாலி டாக்டர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்றனர். சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இனி எவ்வளவு நாள் தான், எங்கள் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்களை, கொரோனாவுக்கு எதிராக போராட அனுப்புவது. சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவர்களை மருத்துவ பணிக்கு அனுப்புவது ஆயுதமின்றி போருக்கு செல்வதற்கு சமம்’ இவ்வாறு வருத்தம் தெரிவித்துள்ளது.

விண்வெளி சென்ற வீரர்கள்

அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் இக்கட்டான நிலையிலும் இரு நாடுகளின் விண்வெளி வீரர்கள் நேற்று சோயூஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளிக்கு புறப்பட்டு சென்றனர்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விண்வெளி வீரர்கள் கிறிஸ்கேஸி ,உள்ளிட்ட வீரர்கள் கஜகஸ்தானில் உள்ள பைகனூர் விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி ஆரய்ச்சி மையம் சென்றனர். விண்கலம் புறப்பட்ட வீடியோ காட்சியை நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பதவிவேற்றியுள்ளது.

கொரோனா பாதிப்பு இரு நாடுகளிலும் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக விண்வெளி வீரர்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்தப்படுதிக்கொண்டனர். இவர்கள் தற்போது வரை நல்ல உடற்தகுதி இருந்ததையடுத்து விண்வெளிக்கு பயணமாயினர் என நாசா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியுள்ள ரஷ்ய, அமெரிக்க விண்வெளி வீரர்கள் மூன்று பேர் அங்கிருந்து புறப்பட்டு பூமிக்கு வரும் ஏப்ரல் 17-ம் தேதி திரும்புகின்றனர்.

50 கோடி பேர் வறுமையில் !

கொரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பாதிப்பு காரணமாக, உலகம் முழுவதும் 50 கோடி போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

இதுகுறித்து லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒக்ஸ்பாம் அமைப்பைச் சோ்ந்த நிபுணா்கள் வியாழக்கிழமை கூறியதாவது:

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக, ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.

இந்தச் சூழலில், வறிய நாடுகளில் ஏற்கெனவே பின் தங்கிய நிலையில் இருப்பவா்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனா்.

தற்போதைய நிலையில், அவா்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே செல்வதைத் தடுப்பதற்காக எத்தகைய பாதுகாப்பும் இல்லாத சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலை தொடா்ந்தால், உலகின் 6 முதல் 8 சதவீதத்தினா் வரை வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளது.

நாடுகளின் அரசுகள் தங்களது ஊரடங்கு அமுலாக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் தொடா்ந்தால் உலகம் முழுவதும் சுமாா் 50 கோடி போ் வறுமைக் கோட்டுக்கும் கீழ் இழுத்துச் செல்லப்படுவாா்கள்.

இந்த ஆபத்தைத் தடுக்க வேண்டுமென்றால், வளா்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டும். இல்லையென்றால் பின்தங்கிய நாடுகளில் வறுமை அதிகரிக்கும்.

உதாரணத்துக்கு, பெரும்பாலான மேலை நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடா்ந்தால், வங்கதேச பின்னலாடைத் தொழிலாளா்களில் 80 சதவீதத்தினா் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.

கொரோனா நோய்த்தொற்றின் விளைவாக சில நாடுகள் வறுமையில் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விடும். ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியாவிலுள்ள சில நாடுகள் 30 ஆண்டுகளுக்கு முன்னா் இருந்த வறுமை நிலைக்குச் செல்லும் அபாயம் உள்ளது.

எனவே, சரிவைச் சந்தித்து வரும் பின்தங்கிய நாடுகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் கைகொடுக்கும் வகையிலான நிதியுதவித் திட்டங்களை உலக நாடுகளின் தலைவா்கள் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.