Breaking News

கொட்டாஞ்சேனையில் போதைப்பொருட்களுடன் வசமாக சிக்கினார் ஒருவர் !

கொட்டாஞ்சேனை வாசல வீதியில் போதைப்பொருட்களுடன் ஒருவரை கைது செய்தது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் .

அவரிடமிருந்து 18 கிலோ கேரளா கஞ்சாவும் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன. நவகம்புர இரண்டாம் தொகுதியில் வசிக்கும் இந்த நபர் வாசல வீதி வீட்டை 35 ஆயிரம் ரூபா மாத வாடகைக்கு எடுத்து போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்த வீட்டில் இருந்து கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை அளவிடும் சிறிய தராசு உட்பட பல பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் 50 லட்ச ரூபா பெறுமதியானவை என்று சொல்லப்படுகிறது .