இலங்கை

கொட்டவெஹெர பிரதேசத்தில் துப்பாக்கி மீட்பு

கொட்டவெஹெர பிரதேசத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடவலவ பொலிஸ் விசேட அதிரடிப்படை, அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய ஹம்பேகமுவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கொட்டவெஹெர பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த துப்பாக்கி கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, துப்பாக்கி ஹம்பேகமுவ பொலிஸாரிடம் கையளிப்பட்டுள்ளது.