இலங்கை

கொச்சிக்கடை தேவாலயம் அருகே நடந்த வாகனக் குண்டுவெடிப்பின் மர்மங்கள் துலங்கின !

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் வெடித்த வாகனக்குண்டு  தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் பாணந்துறை இல்லத்தில் வைத்தே பொருத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்த வேனின் கழற்றப்பட்ட பின் ஆசனங்கள் சாய்ந்தமருதில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
வொஷிங் மெஷின் ஒன்றின் ரைமரை (timer ) ஒன்றை பொருத்தி வைக்கப்பட்ட குண்டு மின் இணைப்பே கோளாறு காரணமாக சரியான நேரத்தில் வெடிக்கவில்லையென தெரியவந்துள்ளது.
கொச்சிக்கடை தேவாலயத்தின் 80 மீற்றர் தூரத்தில் இந்த வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.தேவாலய குண்டுவெடிப்பை பார்க்க வருவோர் ஒரு இடத்தில் கூடுவார்கள் என்று கருதியே நேரம் கணிக்கப்பட்டு இப்படி தூரத்தில் வேன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.
ஆயிரம் ரூபா நோட்டுக்களை இட்டு வாகனக் கதவை இலேசாகத் திறந்தும் – துவாய் ஒன்றை குண்டுடன் தொடர்புபடுமாறு வைத்தும் வாகனத்தை விட்டுச் சென்றனர் தாக்குதல்தாரிகள். காசை எடுக்க கதவை திறந்தால் அல்லது துவாயை இழுத்தால் குண்டு வெடிக்கக் கூடியவாறு அது அமைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
12.5 கிலோ எடையுடைய 3 எரிவாயு சிலிண்டர்கள் பொருத்தப்பட்ட இந்தக் குண்டு மக்கள் கூட்டத்தில் வெடித்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்குமென பொலிஸ் சொல்கிறது.
இதனுடன் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.