உலகம்

கொங்கோவில் இபோலா பரவல் 

கொங்கோ ஜனநாயக குடியரசில் கடந்த 10 மாதங்களில் 2000க்கும் அதிகமான இபோலா நோய் தொற்றுடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் முக்கால் பங்கு நோயாளர்கள் மிகவும் பாரதூரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலைமையை கட்டுப்படுத்த சுகாதார பணியாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த நோயினால் 1300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.