உலகம்

கொக்கெயின் பாவனைக்கு மன்னிப்பு கேட்ட அமைச்சர்

 

பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மைக்கேல் கோவ், 20வருடங்களுக்கு முன்னர் கொக்கெயின் பாவித்திருப்பதாக ஒப்புகொண்டுள்ளார்.

இதற்கு அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.

தாம் ஊடகவியலாளராக பணியாற்றிய போது, பல சமூக நிகழ்வுகளில் கொக்கெயின் பாவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப்பிழை தாம் பிரதமர் ஆவதற்கு தடையாக இருக்காது என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தெரேசா மே பதவி விலகியதை அடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பு விரைவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.