Breaking News

கொக்கல ப்ரெண்டிக்ஸ் ஊழியருக்கு கொரோனா !

 

கொக்கல ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து அவருடன் நெருங்கிய பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை ,கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 209 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகினர்.

இன்றைய தினத்தில் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி கொழும்புக்கு வெளியில் நேற்று சுற்றுலா சென்றவர்கள் மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க பொலிஸ் தீர்மானித்துள்ளது.